search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி நினைவு நாள்"

    • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட படத்திற்கு அருகே பழங்கள், குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. சர்வ மத பிராத்தனை, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை, விஜய்வசந்த் எம்.பி., மாநில எஸ்.சி.எஸ்.டி.துணை தலைவர் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் மற்றும் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ராஜீவ் அமைதி ஜோதி எடுத்து செல்லப்பட்டது. இந்த ஜோதி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லி சென்று அடைந்து அங்குள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் நாளை (21-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. மருத்துவ முகாம் நடக்கிறது. தேசபக்தி பாடல்களை இசைக்குழுவினர் பாடுகிறார்கள். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும்.

    காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

    இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×