search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ Panneerselvam"

    • எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.
    • பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிப்பதற்கு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினரிடம் அறிக்கை பெற்று கட்டுமானத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டுமானத் தொழிலில் உள்ள சிக்கல்களை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நிலங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியது போன்று, வீடுகளுக்கு தெரு அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுவும் மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பதற்கான நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பீடு மற்றும் பதிவுக் கட்டணங்களின் பல வகைகள், பல ரூபங்களில் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் அதனை உயர்த்துவது என்பது கட்டுமானத் தொழிலை சீர்குலைப்பதோடு, ஏழையெளிய மக்களின் வீடு வாங்கும் கனவையும் சிதைத்துவிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை. பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டுமென்றும், எந்தவிதமான கட்டண உயர்வையும் அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் முதலமைச்சரை தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் அ.ம.மு.க. கட்சி சார்பில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடந்தது.
    • ஒரு குடும்பத்திடம் மட்டுமே ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் அ.ம.மு.க. கட்சி சார்பில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அ.ம.மு.க. கொடியேற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொடநாடு கொள்ளை வழக்கில் அ.ம.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். தற்போது ஓ.பி. பன்னீர்செல்வமும் நம்மோடு இணைந்துள்ளார். நாங்கள் இருவரும் இணைந்து அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம்.

    4 ஆண்டுகளாக பதவி வகித்த பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபபட்டு தி.மு.க. திருந்தி இருக்கும் என வாக்களித்தார்கள். ஆனால் நாங்கள் திருந்தவே மாட்டோம், எங்களுக்கு எதற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தீர்கள் என மக்களை வாட்டி வதைத்து தண்டிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது.

    ஒரு குடும்பத்திடம் மட்டுமே ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதனால் தான் அவரது துறை மாற்றப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

    ×