search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாப்பழம் சீசன் தொடக்கம்"

    • சிறுமலை பலாப்பழத்திற்கு என தனி மகத்துவமும். மற்ற மாவட்டங்களில் விளையும் பலாப்பழத்தை விட இங்கு விளையும் பலாபழமானது இனிப்பும், புளிப்பும் சுவை கொண்டது.
    • இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கியதை யொட்டி வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ளது சிறுமலை. இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மலை விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் மலை சார்ந்த விவசாயமே ஆகும். சிறுமலையில் கனிகளில் பிரதான கனிகளான சிறுமலை வாழையும், பலாவும் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் மிளகு, காப்பி, எலுமிச்சை, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட காய்கனிகள் விவசாயம் செய்து மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

    சிறுமலையின் சிறப்பு அம்சமே வாழையும், பலாப்பழமும் தான். வழக்கமாக பலாப்பழ சீசன் ஆனி, ஆடி மாதம் தொடங்கும். தற்பொழுது ஒரு மாதம் முன்னதாகவே சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி சிறுமலை சந்தையில் பலாப்பழம் விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. சிறுமலை பலாப்பழத்திற்கு என தனி மகத்துவமும் உண்டு. மற்ற மாவட்டங்களில் விளையும் பலாப்பழத்தை விட இங்கு விளையும் பலாபழமானது இனிப்பும், புளிப்பும் சுவை கொண்டது.

    பலாப்பழத்தில் புரத ச்சத்துக்களும், மாவுச்சத்து க்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கி யுள்ளன.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், சிறுமலை பலாபழங்களை போட்டி போட்டுக் கொண்டு ஏல முறையில் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கியதை யொட்டி வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.

    வடிவம், சுலை, பருமனை பொறுத்து விலை நிர்ணயம் செய்யபடுகிறது. அதன்படி இன்று நடந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். ஒரு பலாப்பழம் ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை போனது. சீசன் தொடக்கத்திலேயே பலாப்பழங்களின் விலை உச்சம் தொட்டதால் விவ சாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×