என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டோனி ஓய்வு"
- பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
- "இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஐபிஎல் தொடரில் 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சிஎஸ்கே படைத்துள்ளது.
சென்னை அணியுடனான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 26ம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2ல் விளையாடும்.
இந்நிலையில், பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
"இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தோனி நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் முடிந்தவுடன் தனது விளையாட்டு குறித்து உடனடியாக முடிவு செய்யமாட்டேன் என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து டோனி மேலும் கூறியதாவது:-
ஓய்வு குறித்து எனக்கு தெரியாது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கிறது. எனவே இப்போது ஏன் அது பற்றி யோசிக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி. விளையாட்டிலோ அல்லது வெளியே எங்கேயாவது உட்கார்ந்தோ நான் எப்போதும் சென்னை அணிக்காக இருப்பேன்.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நான் இப்போது நான்கு மாதங்களாக ஃபார்மில் இல்லை. ஜனவரி 31ம் தேதி நான் எனது வேலையை முடித்துவிட்டு மார்ச் 2-3ம் தேதிகளில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். ஓய்வு குறித்து முடிவெடுக்க நிறைய நேரம் எடுக்கும். எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.