search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்எஸ்ஜி"

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளில் இடம் பிடித்திருந்தார்.
    • பஞ்சாப் அணிக்காக 2017 சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    லக்கோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான டேவிட் வில்லே இடம் பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளை அவர் தவறவிட வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் தனிப்பட்ட காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

    அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மாட் ஹென்ரியை தேர்வு செய்துள்ளது. 32 வயதான மாட் ஹென்ரி இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் 2017 சீசனில் பஞ்சாப் அணிக்காக இரண்டு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். ஒரேயொரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    மாட் ஹென்ரி நியூசிலாந்து அணிக்காக 25 டெஸ்ட், 82 ஒரு நாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 95 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளும், டி20-யில் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    ஒட்டுமொத்தமாக ஹென்ரி 131 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 151 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    டேவிட் வில்லே உடன் ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மாட் ஹென்ரியை அடிப்படை விலையான 1.25 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    • விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என நவீன் டுவிட் செய்திருந்தார்.
    • பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2023 சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. இது கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல. எமோசன் நிறந்ததாக இருக்கும். அந்தந்த அணியின் ரசிகர்கள், வீரர்களின் ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷம், எமோசன் காட்டுவார்கள்.

    குறிப்பாக விராட் கோலி எப்படி ஆடுகளத்தில் எமோசன், ஆக்ரோசமாக இருப்பார்களோ அதேபோல் அவரது ரசிகர்களும் இருப்பார்கள். விராட் கோலியுடன் யாரும் மோதிவிட்டால் அவர்களை ட்ரோல் செய்து உண்டு இல்லை என ஆக்கிவிடுவாகர்கள்.

    பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- எல்எஸ்ஜி இடையிலான ஆட்டத்தில் எல்எஸ்ஜி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி வெற்றிக்குப் பிறகு கம்பீர்- விராட் கோலி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்- விராட் கோலிக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது. போட்டி முடிந்த பின் கைக்குலுக்கும் போதும் இருவரும் கைக்கொடுக்க மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையே, விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என டுவிட் செய்திருந்தார். மேலும், பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.

    இது ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களை கோப்படுத்தியது. சென்னையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணிக்கெதிராக எல்எஸ்ஜி படுதோல்வியடைந்தது.

    182 ரன்கள் விட்டுக் கொடுத்ததுடன், 101 ரன்னில் சுருண்டது. குறிப்பாக 3 பேர் ரன் அவுட் ஆனார்கள். நவீன் உல் ஹக் 4 ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இருந்தாலும் 38 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பேட்டிங்கில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாங்கடா... வாங்க... என எதிர்பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி ரசிகர்கள் மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை ட்ரோல் செய்து வருகின்றன.

    இதற்கிடையே டுவிட்டரில் எல்எஸ்ஜி அணி magoes, mango, sweet, aam ஆகிய வார்த்தைகளை Muter words-ல் வைத்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.

    ×