search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 326190"

    • சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் 11மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தப் போக்குவரத்து தடையானது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரில் போக்கு வரத்து நெரிசல் காரணமாக விபத்துகளைத் தடுக்கவும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நேரங்களில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையிலும் சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் கனரக வாக னங்கள் செல்ல காலை 7 மணி முதல் 11மணி வரை யிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையி லும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்து தடையானது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ள பகுதிகள் வருமாறு:-

    சீலநாயக்கன்பட்டி பிரதான சாலை முதல் காந்தி சிலை (திருச்சி பிர தான சாலை) வரை, நெத்தி மேடு சந்திப்பு முதல் குகை (சங்ககிரி பிரதான சாலை), 5 ரோடு முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (ஓமலூர் பிரதான சாலை), மணல் மார்க்கெட் முதல் வள்ளுவர் சிலை வரை (கமலா மருத்துவமனை, டவுன் ரெயில் நிலையம்),

    சுந்தர் லாட்ஜ் முதல் மாவட்ட கலெக்டர் அலுவ லகம் (பிரட்ஸ் சாலை), சுந்தர் லாட்ஜ் முதல் அண்ணா பார்க் (காந்தி மைதானம்) ஆகிய சாலைக ளில் கனரக வாகனங்கள் செல்ல நிரந்தர தடை விதிக் கப்பட்டுள்ளது.

    மேலும் அத்தியாவசிய (பால், தண்ணீர், மருந்து) வாக னங்களுக்கு தடை ஏதும் இல்லை. இந்த நடவ டிக்கைக்கு வாகன ஓட்டு நர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×