search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்"

    • காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • 1 மணிக்கு ஆற்றங்கரையில் அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வள்ளுவர் நகரில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 24-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா விநாயகர் வேள்வி, 108 சங்காபிஷேகம், காப்பு கட்டுதல், கொடியே ற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அம்மன் அழைப்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்றுமுன்தினம் காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது.

    தொடர்ந்து ஆடத்தொரை ஆற்றில் இருந்து அம்மன் மேள-தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து மதியம் 12 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட திரளான பக்தர்கள் கோவிலில் பூ குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு அன்ன பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு கண்கவர் வாணவேடிக்கையும், 8 மணிக்கு வள்ளுவர் நகர் சிறுவர்- சிறுமிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, 9 மணிக்கு நீர்தொழுதல், 11 மணிக்கு மாவிளக்கு பூஜையும் அன்னதானம் நடந்தது. மதியம் 1 மணிக்கு ஆற்றங்கரையில் அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.

    ×