என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சகதிகள் அகற்றம்"
- கரைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
- ஆகாயத்தாமரைகள், சகதிகள் அகற்றம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரி புதுகுடியிருப்பு பகுதியில் சுப்பையார்குளம் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம் குப்பைகள் சூழ்ந்து கழிவுநீர்கள் பாய்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக காணப்பட்டது.
நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்த குளம் தூர்வாரப்படாமல் மோச மான நிலையிலேயே இருந்து வந்தது. ஆகாயத்தாமரைகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு காணப்பட்டது.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் சுப்பையார்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து சுப்பையார்குளம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. மேயர் மகேஷ் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி தொடங்கியது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குளத்தில் கிடந்த சகதிகள் ஆகாயத்தாமரைகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் குளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரை ராட்சத மோட்டார் மூலமாக வெளியேற்றி குளத்தை ஒரே மட்டமாக சீர் செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குளத்தில் மேடாக காணப்பட்ட பகுதியில் உள்ள மணல்களை அப்பு றப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் இந்த பணியை முடிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இதை யடுத்து குளத்தை சீரமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் குளத்தின் கரை பகுதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடைந்து கிடந்த கரை பகுதியை சீரமைக்க நடவ டிக்கை மேற்கொண்ட னர். தற்பொழுது கரை பகுதி முழுவதும் சீரமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர குளத்துக்குள் கழிவுநீர் பாயாமல் இருக்கும் வகை யில் அந்த பகுதியிலிருந்து குளத்துக்குள் வந்த கழிவுநீர் குழாய்களை அடைத்து வேறொரு பைப் லைனில் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தற்பொழுது 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் சுப்பையார்குளம் புதுபொலிவுடன் காட்சி யளிக்கிறது. இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த பணி களும் நிறைவடையும்போது சுப்பையார்குளம் பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சுப்பை யார்குளம் முழுவதும் தூர்வா ரப்பட்ட பிறகு அந்த குளத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பும் மாநக ராட்சி நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறது.
கிருஷ்ணன் கோவில் உள்ள சுத்திகரிப்பு நிலை யத்திலிருந்து சுத்திகரிக்கப் பட்ட தண்ணீரை பைப் லைன் மூலமாக சுப்பையார் குளத்தில் கொண்டு விடுவ தற்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குளத்திற்கு வந்து நிரம்பும் போது குளம் புது பொலி வுடன் காட்சி யளிக்கும். வாத்தியார்விளை, புது குடியிருப்பு, பள்ளி விளை, கிருஷ்ணன்கோவில் பகுதி மக்களுக்கு இந்த குளம் பயனுள்ளதாக அமையும்.
இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட் டமும் உயர வாய்ப்புள்ளது. சுப்பையார்குளம் தூர்வா ரப்பட்ட பிறகு அந்த பகுதி யில் வசிக்கும் மக்கள் குப்பைகளை அந்த குளத் தில் போடாமல் அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போட வேண்டும்.
குளத்தை சுத்தமாக பேணி காப்பது அந்த பகுதி மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத் தாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்