என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல் மூட்டைகள் மாயம்"
- காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
- குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மாயமான நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.1.50 கோடிக்கும் அதிகம் ஆகும்.
24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ள கிடங்கிலிருந்து நெல் மூட்டைகளை வெளியாட்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது. 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானது அம்பலமான பிறகு, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, மிகப்பெரிய முறைகேட்டை, மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டிணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்று இங்கு வந்து பார்வையிட்டபோது, 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு அட்டிக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறையில் ஒரு சில அட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும், சில அட்டிகளில் 2500-க்கும் குறைவாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். அவ்வாறு குறைவாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஒரு சிலர் தவறுதலாக எண்ணி விட்டு நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்ததாக திரித்து எங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகதான் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடோனில் எந்த மூட்டைகளும் மாயமாகவில்லை. மேலும், சரிந்து கிடக்கும் மூட்டைகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.
தற்போது நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவும், மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளிலும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தற்போது நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.
- சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
- மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த தி.மு.க. ஆட்சியில் தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரையை எரும்புதின்றது. சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல் மூட்டைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
மக்கள் வரிப்பணத்தில் உல்லாச பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முன்னுக்குப்பின் முரணான வகையில் எண்ண முடியாதபடி நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
- பிறகு தான் எத்தனை மூட்டைகள் மாயமானது என்பது முறையாக அறிவிக்க முடியும்.
தருமபுரி,
தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, திறந்த வெளி குடோனில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் விளையும் நெல், தருமபுரி மாவட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாதந்தோறும் டெல்டா மாவட்டங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவைகளை தருமபுரிக்கு சரக்கு ெரயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு வரும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான தருமபுரி மாவட்ட கலெக்டர் பங்களா பின்புறத்தில் உள்ள திறந்த வெளி குடோனில் அடுக்கி வைத்து சேமிக்கப்படுகிறது.
அரிசி தேவை என்ற பட்சத்தில் லாரிகள் மூலம் நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கிறது. ஆலைகளில் நெல் அரைத்து பச்சரிசியாக, தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தஞ்சாவூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தருமபுரிக்கு சரக்கு ெரயில் மூலம் 22 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனை நுகர்பொருள் வாணிப கழக குடோனில் வைக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்து சுமார் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விஜிலென்ஸ் போலீசார் வந்து சோதனை செய்துள்ளனர். இதில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி யிருப்பது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் கூறும்போது:
நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து நெல் மூட்டைகள் குறைந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தருமபுரியில் நாங்கள் சோதனை செய்தபோது வழக்கமாக மூட்டைகளை எளியமுறையில் எண்ணும் வகையில் வரிசையாக அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அதற்கு மாறாக முன்னுக்குப்பின் முரணான வகையில் எண்ண முடியாதபடி நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் சுமார் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும். மேலும், அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் பிறகு தான் எத்தனை மூட்டைகள் மாயமானது என்பது முறையாக அறிவிக்க முடியும். இதுகுறித்து அனைத்து தகவல்களை அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது முறையான நடவடிக்ைக எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் தருமபுரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்த 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகளில் சில நெல் மூட்டைகள் குறைந்துள்ளதாக, விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல்களை அரவைக்கு அனுப்பினால்தான், குறைவான நெல் குறித்து தெரியவரும். தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தாமதம் ஆகிறது. விரைவில் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்