search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனியாபுரம்"

    • வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது.
    • சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது. இதில் சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 300 மாடு பிடி வீரர்கள் களமிறங்கினர். இதில் 25 பேர் காயமடைந்தனர்.

    காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடிய மாடு பிடி வீரர்களுக்கும், பிடி படாது சீறிப்பாய்ந்த காளை களின் உரிமையாளர்க ளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. வாழப்பாடி தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியாபுரம் மாதேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.

    சேலம் ஆர்.டி.ஓ மாறன், சேலம் போலீஸ் எஸ்.பி சிவக்குமார், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரி, காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    மேலும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று மிகுந்த ஆரவா ரத்தோடு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்.

    ×