search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை]"

    • மனித -வனவிலங்குகள் மோதல் குறித்தும், மின்வேலிகள் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடுகளை உடனே பெற்று தர வேண்டும் என்றார்.

     மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு பகுதியில் காரமடை வனத்துறை சார்பாக மனித -வனவிலங்குகள் மோதல் குறித்தும், மின்வேலிகள் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு காரமடை வனச்சரகர் திவ்யா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அதிகாரிகள் விளக்கம் கொடுத்து விவசாயிகளை சமாதானம் செய்தனர்.

    கூட்டத்தில் வன உயிரின ஆர்வலர் அப்துல் பேசியதாவது:-

    இயற்கையை நாம் எந்த அளவுக்கு அழிக்காமல் பாதுகாக்கிறோமோ அந்த அளவுக்கு இயற்கை நம்மை பாதுகாக்கும். வன எல்லைப் பகுதியில் யானைகளுக்கு பிடித்த பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளையும் இயற்கையையும் பிரித்துப் பார்க்கக் கூடாது.

    இயற்கையை அழித்தோம் என்றால் வனவிலங்குகள் அழிந்துவிடும். வனவிலங்குகளை அழித்தால் இயற்கை அழிந்து விடும். இந்த இரண்டும் அழிந்தால் மனித இனம் அழிந்து விடும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்யக்கூடியவை.

    வரக்கூடிய காலங்களில் இயற்கையோடு வனவிலங்குகளோடு ஒன்றி வாழக்கூடிய வழி வகைகளை நாம் பார்க்க வேண்டும்.

    மழை இன்று பெரிய பிரச்சினையாக உள்ளது. சரியான காலகட்டங்களில் சரியான அளவு பெய்வது இல்லை. மழை தாக்கம் குறைவாக உள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் மரங்களை அழித்தது தான். மரங்கள் வளர்த்து இயற்கை பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    காரமடை வனச்சரகர் திவ்யா பேசியதாவது:-

    மின்வேலி அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு தூரம் மின்வேலி அமைக்கப்பட வேண்டும், எவ்வளவு இடைவெளி விட வேண்டும், எவ்வளவு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும்.

    மின்வேலிகளை அமைத்துள்ளவர்கள், இனி அமைப்பவர்கள் எங்களிடம் தெரிவித்து அதற்கான உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. தேவைப்படுபவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றார்.கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

    யானைகள் வராமல் இருக்க தோட்டத்தில் மின் வேலிகளை அமைக்க அரசு கூறி உள்ளது. பணம் உள்ள விவசாயிகள் மின்வேலிகளை அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பணம் இல்லாத ஏழை விவசாயிகள் எப்படி வேலிகளை அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    அதற்கு பதிலாக வன எல்லையில் வனத்துறை சார்பாகவே மின்வேலிகளை அமைத்து யானையை ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும். தேனீ வளர்ப்பு மூலமாக யானைகள் வராது என கூறப்படுகிறது. வனத்துறையினர் தேனீக்களை வளர்த்து யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடுகளை உடனே பெற்று தர வேண்டும் என்றார்.

    • அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 40க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதராவாக ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க எம்பி பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அவர்கள் பா.ஜ.க எம்.பி. பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரியும், அவர் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.

    ×