search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமசர கூட்டம்"

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு வளமீட்பு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குப்பை ஏற்றி வரும் வண்டிகள் எங்கள் பகுதியில் வரக்கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் அருகே உள்ள ஜெகன் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் (குப்பைகளை தரம் பிரித்தல்) செயல்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை சுற்றி 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும், குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், தொற்று நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளதாகவும் கூறி, வளமீட்பு பூங்காவை மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வளமீட்பு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, தலைவர் ருக்மணி மோகன்ராஜ் இதற்கான சமரச பேச்சுவார்த்தை மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெறுவதாக தெரிவித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டு அதற்கான சமரச பேச்சுவார்த்தை நேற்று மீஞ்சூர் பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேரூராட்சி சார்பில், வளமீட்பு பூங்காவில் 2வது வார்டு குப்பைகளை மட்டும் தரம் பிரிப்பதாகவும், தற்காலிகமாகமாக செயல்படுவதாகவும், குப்பைகள் தரம் பிரிக்க வேறு இடத்திற்கு மாற்றப்படும் வரை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வளமீட்பு பூங்கா என்ற பெயரில் பேரூராட்சி குப்பைகளை கொண்டு வந்து கொட்டி தரம் பிரிக்க விடமாட்டோம், குப்பை ஏற்றி வரும் வண்டிகள் எங்கள் பகுதியில் வரக்கூடாது எனவும், வளமீட்பு பூங்காவை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ஒரு போதும் எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம், நோய் பரவுவதற்கு அனுமதிக்க விடமாட்டோம் எனவும், முதலாவது எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை எடுங்கள் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கூட்டத்தை புறக்கணித்து, திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றுவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×