search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெனகை மாரியம்மன்"

    • ஜெனகை மாரியம்மன் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
    • சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான்ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 17-வது நாளில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இதையொட்டி மாலை 4 மணியளவில் கொடி இறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நடந்தது. தொடர்ந்து கையில் வாளி, இடுப்பில் குடம், மற்றொரு கையில் ஊத்துபட்டை ஏந்திய அலங்காரத்தில் அம்மன் வைகை ஆற்றுக்கு சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு 12 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வண்ண பூக்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீர்த்தவாரி மேடையில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தீர்த்தவாரி மண்டகப்படி உபயதாரர் பால்பாண்டியன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாலையில் வைகை ஆற்றிலிருந்து ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.
    • பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் ஸ்ரீமத் பரமானந்தா சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ வரவேற்றார். பிரம்மா குமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகமும் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. முடிவில் முன்னாள் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் நன்றி கூறினார். முன்னாள் சேர்மன் முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×