என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் செலவு"
- குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது.
- இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது.
புதுடெல்லி :
குஜராத் மாநிலத்தில் 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது.
இமாசலபிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க.விடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி செலவு செய்த தொகை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது.
அதன்படி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது. அதே நேரத்தில் இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது. ஆக, இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ரூ.130 கோடி செலவு செய்துள்ளது.
இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ரூ.49 கோடியே 69 லட்சத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டி உள்ளது.