search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது"

    • பொதுமக்கள் வெயிலுக்கு கூட ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சுங்கச்சாவடி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    அம்மாபேட்டை, 

    ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து தொப்பூர் வரையுள்ள சாலை 85 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையை 10 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பவானியில் இருந்து தொப்பூர் வரை ரோட்டின் இருபுறமும் உள்ள சுமார் 950 மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. ரோட்டின் இருபுறமும் பசுமையாக காட்சி அளிக்கும் இந்த மரங்கள் தற்போது வெட்டப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் இந்த பகுதியில் பொதுமக்கள் வெயிலுக்கு கூட ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அம்மாபேட்டை உள்ளிட்ட 2 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக ரோட்டின் இருபுறங்களிலும் தலா 1.50 மீட்டருக்கு தார்சா லையும், மண் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அகலப்படு த்தப்பட்டு வரும் இந்த ரோட்டில் டோல்கேட் அமைப்பதற்கான தகுதி இல்லை என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கூறி வருகின்றனர்.

    மேலும் இந்த டோல்கேட் அமைப்பதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×