search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை தீ விபத்து"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
    • ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மும்பை:

    மும்பை அந்தேரி மேற்கில் லோசந்த்வாலா வளாகம் உள்ளது. இங்குள்ள ரியல் பேலஸ் கட்டிடம் 14 மாடிகளை கொண்டது.

    அடுக்குமாடி குடியிருப்பான இந்த கட்டிடத்தின் 10-வது மாடியில் இன்று காலை 8.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தீயில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    மூத்த குடிமக்கள் தம்பதியான சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் பெலுபேட்டா (42) ஆகிய 3 பேரும் தீயில் கருகி பலியானார்கள். 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

    ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீ விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் இருந்து தீயணைக்கும் பணி நடைபெறுகிறது.

    மும்பை:

    மும்பையின் கல்பாதேவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரசித்தி பெற்ற மும்பாதேவி ஆலயத்தின் அருகே நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது. தீப்பற்றிய கட்டிடத்தில் வசித்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சிலர் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெளியேற முடியாமல் தவித்த 50க்கும் மேற்பட்ட மக்கள், அருகில் உள்ள கட்டிடத்தின் படிக்கட்டுகள் வழியாக மீட்கப்பட்டனர். தீ விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

    கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தின் மேற்கூரையின் சில பகுதிகள், படிக்கட்டுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் இருந்து தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் ஐந்து தளங்களில் தீ பரவி உள்ளது. தீயை கட்டுப்படுத்தியபிறகு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்.

    ×