search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் நாள் முகாம்"

    • ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
    • முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    குறைதீர்க்கும் நாள் முகாம் கீழ்க்கண்ட இடங்களில் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி ஈரோடு வட்டத்திற்கு கரட்டுப்பாளையம் ரேஷன் கடையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெறுகிறது. பெருந்துறை வட்டத்திற்கு கருமாண்டி செல்லிபாளையம்-௧ ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    மொடக்குறிச்சி வட்டத்திற்கு ஆயி கவுண்டன் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு, உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடை பெறுகிறது. கொடுமுடி வட்டத்திற்கு காரவலசு ரேஷன் கடையில் ஈரோடு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலை மையில் நடைபெறுகிறது.

    கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு ஆலங்கா ட்டுப்புதூர் ேரஷன் கடையில் கோபி செட்டிபாளையம் வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    நம்பியூர் வட்டத்திற்கு குருமந்தூர் ரேஷன் கடையில் கோபி செட்டிபாளையம், வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது. பவானி வட்டத்திற்கு மாணிக்கம் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.

    அந்தியூர் வட்டத்திற்கு முகாசிபுதூர் ரேஷன் கடையில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. சத்தியமங்கலம் வட்டத்திற்கு கூத்தம்பாளையம் ரேஷன் கடையில் ஈரோடு தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

    தாளவாடி வட்டத்திற்கு இக்கலூர் ரேஷன் கடையில் கோபிசெட்டிபாளையம் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலைமையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    ×