என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெறிச்சோடிய கொடிவேரி அணை"
- 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்று தான் திறக்கப்பட்டது.
- 2 மாதத்துக்கும் மேலாக கொடிவேரி அணை பகுதிகளை கட்டியது.
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ளது கொடிவேரி அணை. இங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்ற ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து சென்றனர். மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்று தான் திறக்கப்பட்டது.
தமிழக்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் நேற்று வரை கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இதனால் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கொடிவேரி அணை பகுதி களை கட்டியது. மீன்கள் விற்பனை அதிகளவில் இருந்தது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி கொடிவேரி அணை வெறிச்சோடியது. மீண்டும் விடுமுறை நாளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்.