என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமயபுரம் கோவில்"
- தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இதனால் சமயபுரம் கோவில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த தெப்ப குளத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பார்கள்.
இந்த தெப்ப குளத்தில்தான் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு சென்ற போலீசார் காக்கி சட்டை, பனியன் அணிந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு விசாரணையை தொடங்கிய போலீசார், தெப்பகுளத்தை சுற்றி சோதனை மே ற்கொண்டனர். அப்போது அங்கு உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் மேலும் ஒரு ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சடலத்தையும் மீட்டனர். இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் யார்? இது விபத்தா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து சமயபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன.
- வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.
மகாளய அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும்.
பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.
காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி , முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.
சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது.
மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.
பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கலாம். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறலாம்.
வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.
தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் மகாளய அமாவாசைக்கு ஏற்ற இடமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்