search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி கைது"

    • மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றைய தினம் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்துள்ளார்கள்.
    • சில வாரங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எச்சரித்து இருந்தார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுமைக்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச்சேர்க்கைக்கான நாளாக ஜூன் 23-ம் நாள் குறிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும்-கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது.

    அதன் அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பல்வேறு பழி வாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலனாய்வு விசாரணை அமைப்புகளை குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் மீது பயன்படுத்தாமல், தன்னுடைய அரசியல் எதிரிகள் மீது பா.ஜ.க. பயன்படுத்தி வருவதை ஊடகங்கள் புள்ளி விபரங்களுடன் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது.

    ஆனாலும் பா.ஜ.க. தலைமை திருந்தவில்லை. வெளிப்படையாக-ஆணவமான முறையில் விசாரணை அமைப்புகளை அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள்.

    எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டது. தமிழ்நாடு என்பது பா.ஜ.க.வை பின்னங்கால் பிடறியில் அடிபட விரட்டும் மாநிலம். இங்கு அவர்களால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, தனியாக நின்று டெபாசிட்கூட வாங்க முடியாது என்பது தெரியும். அதனால் தான் நேர்வழி இல்லாமல் நேர்மையற்ற வழிகளில் பா.ஜ.க. தனது கீழான செயல்களைச் செய்கிறது.

    மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றைய தினம் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்துள்ளார்கள். நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள். விசாரணைக்கு அமைதியாக ஒத்துழைப்புத் தந்தவரையே இந்தளவுக்கு வேண்டுமென்றே தொல்லையையும், நெருக்கடியையும் கொடுத்திருப்பது பழி வாங்குவதே தவிர, விசாரணை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை-அதுவும் அமைச்சரைச் சித்ரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத்துவது அரசியலே தவிர, விசாரணை அல்ல.

    மேலும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய பாதுகாப்புப் படைப் போலீசாரை அழைத்து வருவது தான் மாநில ஆட்சியின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும், எப்போதும் நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவப் போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா? மிரட்டுகிறார்களா? இவை எதற்கும் பயப்படுகிறவர்கள் அல்ல நாங்கள்.

    மூன்று நாட்களுக்கு முன்னால்தான் ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னைக்கு வந்து சென்றார். அவரது பயண நோக்கமும், பிரசாரக் கூட்டமும் படுதோல்வி என்பதை அனைவரும் அறிவார்கள். இதனை மறைப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கையை பாய்ச்சி இருக்கிறார்கள். சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தவுடன் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டே தலைமறைவானவர் அமித்ஷா என்பதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.

    சில வாரங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எச்சரித்து இருந்தார்கள். இப்படி உச்சந்தலையில் உச்சநீதிமன்றம் கொட்டிய பிறகும் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை திருந்துவதாகத் தெரியவில்லை. திருத்தும் கடமையும், பொறுப்பும் நாட்டு மக்களுக்கே உண்டு.

    பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத-மக்கள் விரோத-பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் "மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்" நடைபெறும். பாஜகவுக்கு இறுதித் தோல்வியைத் தரும் வரையில் நமது மக்கள் பிரசாரம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

    • நோட்டீசில் எங்களது (அமலாக்கத்துறையின்) அனுமதியின்றி இந்த அலுவலகத்தை திறக்கக்கூடாது.
    • சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் கடந்த 26-ந்தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 8 நாட்களுக்கு பிறகு நிறைவடைந்தது.

    அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனையில் இறங்கினர். கரூரில் 8 இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது.

    இதற்கிடையே கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது.

    இதில் தற்போது வரை சோதனை நடத்தப்படாத நிலையில் நேற்று இரவில் அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளதோடு, அசோக்குமாரின் அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.

    மேலும் அந்த நோட்டீசில் எங்களது (அமலாக்கத்துறையின்) அனுமதியின்றி இந்த அலுவலகத்தை திறக்கக்கூடாது. சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பின்னரே அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த டெக்ஸ்டைல்ஸ் அலுவலகத்தின் ஊழியர்கள், பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தை பார்த்து திரும்பி சென்றனர்.

    • செந்தில் பாலாஜியின் ஆஞ்சியோ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையையும் கருத்துக்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டு அறிகிறார்கள்.

    சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆஞ்சியோ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    ஆன்லைனில் இந்த மருத்துவ அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையையும் கருத்துக்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டு அறிகிறார்கள்.

    அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு எடுக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
    • செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையை தடுப்பது சரியல்ல.
    • தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் சட்ட விரோதமாக பார்கள் நடத்தி கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. சட்ட விரோத மது விற்பனை மூலம் அரசின் கருவூலத்திற்கு வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படி தனது கடமையை செய்திருக்கிறது.

    வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார். நேற்று வரை அவர் ஆரோக்கியமாக இருந்தார். வாக்கிங் சென்றார். திடீரென்று அவருக்கு எப்படி நெஞ்சு வலி வந்தது.

    எனவே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்து மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையை தடுப்பது சரியல்ல. தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

    அ.தி.மு.க. ஆட்சியின் போது தலைமை செயலகத்தில் நடந்த சோதனையின் போது தமிழகம் தலைகுனிந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். இப்போது தமிழகம் தலை நிமிர்ந்து விட்டதா? தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவரை யாரும் பார்க்க முடியாது. ஆனால் அமைச்சர்கள் எல்லோரும் போய் பார்க்கிறார்கள்.

    அமலாக்கத்துறையின் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் நீக்காவிட்டால் கவர்னர் தலையிட்டு செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார்.
    • எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி-அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன்.

    நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள். ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். அதுதான் இங்கும் நடக்கிறது.

    விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள்.

    நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.

    விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா?

    அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது.

    என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார்.

    எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×