என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 334907
நீங்கள் தேடியது "குமரி எல்லை"
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதிலும் தொடர்ந்து அனுமதியின்றி பாறைகள் உடைக்கப்பட்டே வருகிறது.
- வெடிமருந்து குச்சிகள் மற்றும் பாறை துளை போடுவதற்கு பயன்படுத்துகின்ற எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்
அருமனை:
குமரி மாவட்டம்-கேரள எல்லையில் உள்ள புலியூர் சாலை வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட நாகத்தான் குழி ஆயவிளை பகுதியில் நீண்ட நாட்களாக அனுமதி இன்றி பாறை உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தல் செய்யப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதிலும் தொடர்ந்து அனுமதியின்றி பாறைகள் உடைக்கப்பட்டே வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அங்கு பாறை உடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 15 வெடிமருந்து குச்சிகள் மற்றும் பாறை துளை போடுவதற்கு பயன்படுத்துகின்ற எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த சுபின் குமார் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் குமாரதாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.
×

X