search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரயம்"

    • இரண்டு பேருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    • பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறித்துக் கொண்ட சிவாவை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயரத்தினம் (வயது 50).

    இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் நாடியம்மாள்புரத்தில் உள்ளது.

    இந்த சொத்தில் பங்கு கேட்டு அவரது உறவினர்கள் அவ்வப்போது தகராறு செய்து வந்தனர்.

    இந்த விவரத்தை தனது குடும்ப நண்பரான பாப்பாநாடு கிராமத்தை சேர்ந்த சிவாவிடம் தெரிவித்தார்.

    அதற்கு அவர் இந்த சொத்தை எனது பெயருக்கு ஒரு பொது அதிகார ஆவணம் எழுதி வைத்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இதனை உண்மை என்று நம்பிய ஜெயரத்தினம் தனது பேரில் இருந்த சொத்தை சிவாவிற்கு பவர் எழுதி வைத்தார்.

    ஆனால் அதன் பிறகு ஜெயரத்தினத்திற்கு தெரியாமல் அந்த இடத்தை சிவா தனது உறவினரிடம் அடமானம் வைத்தார்.

    பின்னர் அந்த இடம் இரண்டு பேருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அறிந்த ஜெயரத்தினம் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துக்களை அபகரித்துக் கொண்ட சிவா உள்பட 3 பேரை கைது செய்து எனது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்திருந்தனர்.

    மற்ற 2 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயபிரகாசை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

    ×