என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் அதிகாரி தற்கொலை"
- தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
- வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலா. இவர் உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்றிரவு பணிக்கு வந்துள்ளார். இன்று காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
- முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திலகவதி (வயது 26). இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும் சேலம் மணியனூரைச் சேர்ந்த வெள்ளையங்கிரி என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
இதனால் மனமுடைந்த திலகவதி கடந்த 11-ந்தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.
அவரது உடலை பரிசோதித்த அரசு டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் உறவினர்கள் கதறினர்.
இது குறித்த முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்