search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாய்மர படகு"

    • பாய்மர படகுப்போட்டி நடந்தது.
    • 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், முள்ளிமுனையில் ஸ்ரீ பட பத்திர காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராம தலைவர் கருப்பையா தலைமையில் துணை தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர் அமிர்தவள்ளி மேகமலை ஆகியோர் முன்னிலையில் பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

    இதில் கோட்டைப்பட்டிணம், தேவி பட்டிணம், தொண்டி, நம்புதாளை பகுதியிலிருந்து 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமை யில் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

    • பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
    • புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு போலீஸ் துறையில் பெண் போலீசார் கால் தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதையொட்டி பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னையில் இருந்து பாய் மர படகு மூலம் புறப்பட்டு பழவேற்காடு வழியாக கோடியக்கரை வரை சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயண நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. 1,000 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தை 4 பாய்மர படகுகளில் 30 பெண் போலீசார் மேற்கொண்டனர். இந்த பாய்மர படகு பயணத்தில் பெண் போலீஸ் உயரதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் மகேஸ்வரி, பவானீஸ்வரி, டி.ஐ.ஜி. கயல்வழி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கோடியக்கரை சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினர்.

    இந்நிலையில் நேற்று காலை புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களை புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர். பின்னர் அந்த குழுவினர் இங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை துறைமுகம் சென்றடைகின்றனர். 

    ×