என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெறிநாய்கள் தொல்லை"
- வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
- விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப் பாளையம் கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சென்றவாரம் ஊர் கவுண்டரின் 2 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று விடியற்காலையில் மலைக்காரி ஆயா அலமேலு என்பவரின் 5 ஆடுகளை பல நாய்கள் சேர்ந்து கடித்து கொன்றுள்ளது. எனவே காட்டுப்பாளையம் பிரம்மதேசம் புதூர் பகுதியில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுவதால் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த ஒரு மாதத்தில் இந்த பகுதியில் குடியிருப்பு வாசிகள், இந்த பகுதிக்கு வந்து சென்றவர்களில் சுமார் 100 பேரை வெறி நாய் கடித்துள்ளது.
- வெறிநாய் தொல்லையால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி ஒன்றி யத்திற்குபட்ட இலக்கியம் பட்டி ஊராட்சியானது தருமபுரி நகரத்தை ஒட்டயுள்ள ஒரு பெரிய நகர பகுதியாகும்.
இந்த ஊராட்சிக்குபட்ட பகுதிகளான பிடமனேரி, ரங்கா நாதர் தெரு, மாரியம்மன் கோவிலில் இருந்து ஏரிக்கரை செல்லும் வழி மற்றும் குடியிருப்பு பகுதியில், சுமார் ஆயிர த்திற்க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. இதில் குறிப்பாக வெறி நாய்கள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நர்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர், ஆட்டோ ஓட்டுனர், 2 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4 பேரை வெறிநாய் கடித்து குதறியது.
இைததொடர்ந்து நேற்று பிடமனேரியை கடந்து மொன்னையன்கொட்டாய் பகுதிக்கு சென்ற முதியவரை, வெறிநாய் கடித்ததில் முழுங்கால் கீழ் சதை ரத்தம் வழிய தொங்கியது.
வலியால் துடித்த முதியவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்தில் இந்த பகுதியில் குடியிருப்பு வாசிகள், இந்த பகுதிக்கு வந்து சென்றவர்களில் சுமார் 100 பேரை வெறி நாய் கடித்துள்ளது.
வெறிநாய் தொல்லையால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், மாணவர்கள் வெறிநாய்க்கு அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது.
வெறிநாய் தொல்லை குறித்து இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி சுகாதார ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தும் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்