என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாமிதோப்பில்"
- தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது.
- சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு, கரும்பாட்டூர், வடக்கு தாமரைகுளம் ஆகிய ஊராட்சிகளின்தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் நம்பி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் சாமிதோப்பு தலைமைபதி குருவும், தி.மு.க.வக்கீலுமான ஜனா யுகேந்த், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர்கள் பொன் ஜான்சன், தமிழன் ஜானி, வடக்கு தாமரைகுளம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், நிர்வாகி தாமரை பிரதாப், கரும்பை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி:
தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன்.
இவர் கடந்த 11-ந்தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளை சாமிதோப்பு பகுதியில் ஒரு ஓட்டல் அருகே சாவியுடன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கீழமணக்குடி சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அதில் வந்தவர்கள் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மகேந்திரன் (20) என்பதும், இவர்கள் சாமி தோப்பில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் சிறையில் அடைக் கப்பட்ட கண்ணன் மீது தென் தாமரைகுளம், அஞ்சு கிராமம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்