search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலூர் சந்தை"

    • வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.
    • மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரில் சந்தைப்பேட்டை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை சந்தை நடைபெறும். இதில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    மேலூர்-திருச்சி மெயின்ரோட்டில் இந்த சந்தைப்பேட்டை அமைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இதனால் இந்த சந்தையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.

    மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் நேற்று நள்ளிரவு முதலே சந்தை பகுதி கூட்டமாக காணப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த ஆடுகள் சுமார் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுவரை விற்பனை செய்யப்பட்ட ஆடுகளில் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

    பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை ஜோராக நடந்ததுடன் ஆட்டுச்சந்தை களை கட்டியது.

    ×