search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளிகள் கொலை"

    • சபரிவாசன், ராஜ்குமார் ஆகியோர் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே பண்ணந்தூரை அடுத்துள்ள சாதி நாய்கன்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு சிற்பங்கள் செய்யும் பணியில், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன் (58) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து பாரூர் போலீசார் மேலும் இந்த கோவில் திருப்பணிக்கு புதிதாக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த கணேசன், கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது கணேசன் என்பவர் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் தான் கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார். கணேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு கோவிலில் வேலை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் தெரிவித்தனர். அதனால் நான் அவரை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் நான் இரும்பு கரண்டியால் அடித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    ×