search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. Rainwater flooded the roads."

    • பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்

    அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள், வார விடுமுறை, பண்டிகை நாட்களில் ஏற்காட்டுக்கு அதிகப்படி யான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். குடும்பத்துடன் காட்டேஜ், ஓட்டல், விடுதி களில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான்பூங்கா உள்ளிட்ட வற்றை சுற்றிப் பார்த்து செல்கின்றனர். மேலும், ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ்சீட் காட்சி முனையம் போன்ற இடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர்.

    பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், கடைகளில் வியாபாரம் களை கட்டியது. சாலை யோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது.அதே சமயம் ஏற்காட்டில் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால், மலைப்பாதையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கொண்டை ஊசி வளைவுகளில் பனி மூட்டமும் சூழ்ந்தது.நண்பகல் வேளையில் படகு இல்லம் மற்றும் ஏரி பகுதி, ஒண்டிக்கடை

    ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலை தெரியாத அளவிற்கு பனிமூட்டம் படர்ந்திருந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    ஏற்காட்டில் நிலவிய இந்த இதமான சீதோஷண நிலையால் சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சிய டைந்தனர். இதேபோல், அருகில் உள்ள வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். 

    ×