search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம் Path encroachment"

    • கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து தனிநபர் வேலி அமைத்துள்ளார்.
    • திருச்சுழி வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொது மக்கள் அறிவித்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட வைரவர் மற்றும் கருப்பணசாமி கோவில் உள்ளது.

    இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட தலைக்கட்டு குடிமக்கள் இருந்து வரும் நிலையில் இடையப்பட்டி, புல்வாய்க்கரை, நேர்த்தியா யிருப்பு பகுதி யிலுள்ள குடிமக்கள் மட்டுமல்லாது பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆண்டு தோறும் வைரவர் கோவில் வைகாசிக்களரி திருவிழா விற்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ஆறுமுகம் என்பவர் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி வந்து கடும் சிரமத்திற்கிடையே வைரவர் கோவிலில் வழிபாடு நடத்தி வருவதாக குடிப்பொதுமக்கள் வேதனை தெரிவித்துள் ளனர்.

    மேலும் தற்போது கம்பி வேலி அமைத்திருக்கும் பகுதிக்குள் நீர்வரத்து கால்வாய்,ஊரணி மற்றும் கலுங்கு அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இவ்வாறு கம்பிவேலி அமைத்ததோடு அப்பகுதியில் தோட்டம் அமைக்க வேண்டி இடையூறாக இருந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட பனை மரங்களையும் வேரோடு வெட்டி சாய்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வரும் ஆறுமுகம் அங்கு கன்றுகள் நட்டு பெரிய தோட்டம் அமைப்பதற்கான பணி களை விரைவாக மேற்கொண்டு வருவதாக வும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தனிநபர் ஒருவர் கோவில் செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கொண்டு வழி விடாமல் மறுத்து வருவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகாரளித்தனர். இதனையடுத்து திருச்சுழி தாசில்தார், கிராம வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் ஆறுமுகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் ஆறுமுகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.ஆகவே வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் பொதுப்பாதையை வழிமறித்து போடப்பட்டுள்ள கம்பி வேலியை உடனடியாக அகற்றுவதுடன் தடையின்றி கோவிலுக்கு சென்று வரும் வகையில் நிரந்தர பாதையை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இடையப்பட்டி பொது மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொது மக்கள் அறிவித்துள்ளனர்.

    ×