search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மார்க்கெட்டுக்கு"

    • இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.
    • ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.

    இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடை ந்ததால் கடந்த வாரத்தில் இருந்து மீன்கள் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மீன் மார்க்கெட்டுக்கு மேலும் மீன்கள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது . மீன்கள் வரத்து அதிகரிப்பு எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வஞ்சரம் ஒரு கிலோ ரூ.1200 வரை விற்கப்பட்டது. இன்று விலை குறைந்து ஒரு கிலோ வஞ்சரம் ரூ.900-க்கு விற்க ப்படுகிறது.

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    அயிலை-300, மத்தி- 250, வஞ்சரம்- 900, விளா மீன்- 350, தேங்காய் பாறை - 500, முரல் -350, நண்டு -400, ப்ளூ நண்டு -750, இறால் -700, சீலா -600, வெள்ளை வாவல் - 900, கருப்பு வாவல் - 850, பாறை - 500, மயில் மீன்- 800, பொட்டு நண்டு - 450, கிளி மீன் - 600, மதன மீன்- 500, மஞ்சள் கிளி- 600, கடல் விலாங்கு- 300, திருக்கை- 400. பெரிய திருக்கை-500, நகர மீன்-450, கடல் வாவல்-60.

    ×