என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்கள் நலப்பணியாளர்கள்"
- ராமநாதபுரத்தில் மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- விரும்பிய இடத்திலோ யே பணியிடமாறுதல்வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவில் கடந்த 33 ஆண்டு காலமாக எங்களை பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டோம். 3-வது முறையாக 2015 அன்று முதல் அமைச்சர் கலைஞர் சட்டமன்றத்தில் அறிவித்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களாக பணி செய்தோம். ஆனால் இதுநாள்வரை எவ்வித பணி நியமன ஆணையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் 2009-ம் ஆண்டு முதல் எங்களுக்கு வழங்க வேண்டிய காலை முறை ஊதியத்தை கணக் கிட்டு வழங்க வேண்டும். முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல இறந்த பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோன்று இறந்த பணியாளர்களின் வரிசுகளுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள காலி பணியிடங்களில் மக்கள் நலப்பணியாளர்களை விரும்பிய இடத்திலோயே பணியிடமாறுதல்வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.