search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோரோட்டம்"

    • தினமும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.
    • வருகிற 21- ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் 14- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. 18- ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பின்னர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமி மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது.

    வருகிற 21- ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்ட விழா வருகிற 22- ந்தேதி நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று நிலையை அடையும்.

    அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 25- ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கடந்த ஜூன் மாதம் 20 ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
    • ஜூன் 27 ந்தேதி செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி திருவிழா தொடங்கியது.

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கடந்த ஜூன் மாதம் 20 ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    ஜூன் 27 ந்தேதி செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி திருவிழா தொடங்கியது.

    நேற்று புதன்கிழமை 9 ம் நாள் திருவிழா மாலை 5 மணியளவில் தென்னங்குடி, களத்தூர், முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் மது எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் முன்பு இளைஞர்கள் விசில் ஊதிய படி மகிழ்ச்சியுடன் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.

    தேரோட்டத்தில் ஆத்தாளூர், பேராவூரணி, நாடாகாடு, கொன்றைக்காடு, மாவடுகுறிச்சி, கீழக்காடு, இந்திரா நகர், ஆண்டவன் கோவில், பூக்கொல்லை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×