search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன விபத்து வழக்கு"

    • நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
    • பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதி மன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் திருவள்ளூர், பொன்னேரி தாலுகா சட்ட பணிகள் குழு சார்பில் சிறப்பு மெகா லோக் அதாலத் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர், நீதித்துறை நடுவர் 1 மற்றும் 2 ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள் வங்கிக்கடன் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 2 கோடியே 7 லட்சத்து 82ஆயிரத்து 880 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கபட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.75 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    தேனி:

    2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமையிலும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 நில ஆர்ஜித வழக்குகள், 4 மோட்டார் வாகன வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு வக்கீல் கருணாநிதி, சட்டப்பணிகள் ஆணையக்குழு அலுவலர்கள், வக்கீல்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×