search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்னை"

    • நேற்று முன்தினம் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்.

    இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவரது மனைவி ராஜலெட்சுமி.

    இவர்களுக்கு முருகபாண்டியன் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் தற்பொழுது திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பாதுகாப்பு ஊழியராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார்.

    கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    அதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறை யினருக்கு நவநீதகிருஷ்ணன் தகவல் கொடுத்துள்ளார்.

    தகவலின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் திருட்டு நடந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆண்டிபாளையம் பகுதி முழுவதுமாக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ கடப்பாரையால் நெம்பப்பட்டு உடைத்து இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நள்ளிரவு நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் சேர்த்து வைத்தி ருந்ததாகவும், தற்பொழுது இவை அனைத்தும் திருட்டுப் போய் இருப்பது நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினர் இடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    ×