search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலரிப்பால்"

    • கலெக்டர் ஆய்வு
    • சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டில்பாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பழைய தேவாலயத்தின் தெற்கு பகுதியில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகும் சூழல் ஏற்பட்டதாக பங்குத்தந்தை, மீனவபிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் கொட்டில் பாடு கடலோர பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடல் நீரானது வீடுகளில் புகாமல் தவிர்க்கும் வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு அவசர கால நிதியின் கீழ் ரூ.20 லட்சத்தில் கடலரிப்பு தடுப்பு பணிகள் உடனடியாக மேற் கொள்ள ஆணை பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மீன்பிடித் துறைமுக கோட்ட செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், உதவி பொறியாளர் அரவிந்த்குமார், கொடில்பாடு பங்குத்தந்தை/ அருட்பணி ராஜ் உள்பட பலர் உடனினிருந்தனர்.

    ×