search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர் குருநாதசாமி"

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
    • கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை வெகுவிமர்சியாக மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தையுடன் நடைபெற்றது.

    இதையடுத்து தேர்த்திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து குருசாதசாமி கோவிலில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். விழாவில் அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்சங்களை காணதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் தினமும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது.

    இந்த பண்டிகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து குருநாதசாமி கோவில்விழா இன்று பால் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த பண்டிகைக்காக 9 இடங்களில் பக்தர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன. மாடுகளை ஏற்றி வருவதற்காக 45,000 டெம்போக்களும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து 1 லட்சம் கார்களில் பக்தர்கள், வியாபாரிகள் வந்திருந்தனர்.

    மேலும் 12 ஆயிரம் மாடுகள், ஆயிரம் குதிரைகள் கால்நடை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. குதிரைச் சந்தை பகுதிகளில் சூதாட்டம் உள்ளிட்ட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு தஞ்சாவூர் சாஷ்டராயூனிவர் சிட்டியில் இருந்து 5 பேர் கொண்ட டீம், ஏ, டெக்னாலஜி பயன்படுத்தி பழைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் பிக் பாக்கெட் உள்ளிட்ட வழக்குகளில் 8 பேர் கைது செய்து சறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த முறை 4 இடங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளான ராட்டணம், சாகச கிணறு, குழந்தைகள் விளையாட்டு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன். இதனால் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் அண்ணா மடுவு ஜி.எச் கார்னர், பஸ் நிலையம் ரவுண்டானா, வெள்ளப்பிள்ளையார் கோயில், வனம், கெட்டி சமுத்திரம் ஏரி பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டு போக்குவரத்தில் சிரமம் இன்றி தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்திருந்தனர்.

    கடந்தாண்டு வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப் பட்டு இருந்தது. இந்த ஆண்டு அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ரவுண்டான பகுதியில் இருந்து நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இந்த மாற்றத்தினால் போக்குவரத்து நெரிசல் சற்று சரி செய்யப்பட்டது.

    • வனக்கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலை வந்து அடைந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ் பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடி பெரும் தேர் திருவிழா நேற்று தொடங்கியது.

    காலை 11 மணியளவில் புதுப்பாளையம் கோவிலில் இருந்து வனக்கோவிலுக்கு காமாட்சி அம்மன் சப்பரத் தேரில் முன் செல்ல, பக்தர்கள் தோளில் சுமந்தபடி பெருமாள்சாமி, குருநாதசாமி ஆகிய தெய்வங்கள் 60 அடி மக மோருதேர்களில் நேற்று வனக்கோவிலை சென்றடைந்தது.

    அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் வனக்கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த தெய்வங்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் வனக்கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலை வந்து அடைந்தது.

    இன்றிலிருந்து 3 நாட்கள் புதுப்பாளையம் கோவிலில் மூன்று தெய்வங்களும் பக்தர்களுக்கு சிறப்புஅலங்காரத்தி ல் அருள்பாலித்து வருகின்றனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வரு கின்றனர்.

    இந்த திருவிழாவின் போது மழை பொழிந்து அந்தப் பகுதி மட்டும் குளி ர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பொழிந்த மழை 4 மணி வரை பெய்தது.

    இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் வெப்பத்திலிருந்து, குளிர்ச்சியான காற்று வீசத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் குளிர்ச்சியான காற்றில் இருக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

    • ஆடிப்பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக மாட்டுச்சந்தை, குதிரை சந்தையுடன் தேர் திருவிழா நடைபெறும்.

    இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த ஆடிப் பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது. வரும் 19-ந் தேதி பூச்சாட்டுடன் பண்டிகை தொடங்க உள்ளது. 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் பூஜையும், 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆடிப்பெரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 16-ந் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது.

    இதற்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துதல், தற்காலிக கடைகள் புதுப்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி பகுதி வரை அமைப்பதற்கான ஏலம் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதேபோல் அந்தியூர் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் தண்ணீர் பந்தல் வனப்பிரிவு வரையான பகுதிக்கு கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் தலைவர் மாறன் தலைமையில் ஏலம் நடைபெற உள்ளது.

    மேலும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செயல் அலுவலர் மோகனப்பிரியா, மற்றும் பரம்பரை தர்மகர்த்தா பி.எஸ்.எஸ்.சாந்தப்பன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.

    ×