என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜகோபாலசாமி கோவில்"
- மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
- வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் சிம்மகொடியை கோவில் தீட்சிதர்கள் ஏற்றினர்.
திருவாரூர்:
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜகோபாலசாமி கோவில் மன்னார்குடியில் பிரசித்திபெற்ற வைணவ திருத்தலமான ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் செங்கமலத்தாயாருக்கு ஆடிப்பூர திருவிழா கொண்டாப்படும்.
இந்த ஆண்டு ஆடிப்பூர உற்சவ திருவிழா நேற்று செங்கமலத்தாயார் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சேனை முதல்வர் நகர் சோதனை முடித்து சிம்மக்கொடி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தீட்சிதர்கள் பூர்வாங்க பூஜைகள் செய்து திருவாராதனம் எனும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் சிம்மகொடியை கோவில் தீட்சிதர்கள் ஏற்றினர். செங்கமலத்தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூர திருவிழாவையொட்டி 10 நாட்கள் செங்கமலத்தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகி்ன்றனர்.