search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல்நாசர் மதானி"

    • மதானி கேரளாவில் தங்கியிருந்து சிசிக்சை பெறலாம், நோய்வாய்ப்பட்டுள்ள அவரது தந்தையை அவர் பார்க்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஜாமீன் நிபந்தனைப்படி மதானி கொல்லத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    பெங்களூருவில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 20பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல்நாசர் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை சந்திக்க கொல்லத்திற்கு கடந்த ஜூன் 26-ந்தேதி முதல் கடந்த 7-ந்தேதி வரை ஜாமீனில் கேரளாவிற்கு மதானி வந்திருந்தார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் மதானி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மதானி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    அது விசாரணைக்கு வந்தது. அதில் மதானி கேரளாவில் தங்கியிருந்து சிசிக்சை பெறலாம், நோய்வாய்ப்பட்டுள்ள அவரது தந்தையை அவர் பார்க்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் நிபந்தனைப்படி அவர் கொல்லத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திடவேண்டும் என்றும், மருத்துவ சிகிச்சைக்காக மாவட்டத்தை விட்டு வெளியே செல்லலாம் எனவும் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

    அதே நேரத்தில் விசாரணை நீதிமன்றம் ஆஜராகுமாறு கூறினால், மதானி பெங்களூரு செல்லவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ×