search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்"

    • வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க்.
    • டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிராவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம்.

    வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க். அனைவரும் சிறுவயதில் டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிரேவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.

    ஆனால் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.

    இதன் விளைவாக இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி , இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக்கொண்டனர்.

    • பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
    • மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்]  உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

     

    இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது  இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி  பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது
    • டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு முதல் தொடரில் டோனி தலைமையில் இந்திய அணி அதன்பின் நடந்த தொடர்களில் வெற்றிபெறவில்லை. தற்போது 17 வருடங்கள் களைத்து 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது.

    இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, தனது எக்ஸ் தளத்தில் டி20 ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தனியாக வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

     

    இந்நிலையில் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

    மோடி ஜடேஜாவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நீங்கள் ஆல் ரவுண்டராக தனித்துவமான முறையில் செயப்பட்டீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஸ்டிரோக் பிளே ஸ்டைலையும்,, அற்புதமான ஃபீல்டிங்கையும் விரும்புகிறார்கள். தற்போதும் கடந்த டி20 போட்டிகளிலும் உங்களின் வசீகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்.

    இந்நிலையில் 'டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்று விட்டார், அவரை பாராட்டி ஒரு டிவீட் எழுது' என CHAT GPT யிடம் கூறியதற்கு அச்சு அசலாக மோடியின் பதிவு போலவே வாக்கியம் பிசகாமல் CHAT GPT எழுதியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவின் டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி.
    • தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.

    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி. படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார்.

    ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வரும் லட்சுமிமேனன் தனது முதல் காதல் பற்றி கூறியதாவது:-

    யாரும் என்னை காதலிப்பதாக சொல்லவில்லை. ஆனால் நான் ஒருவரிடம் என் காதலை சொன்னேன். பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடித்த ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.

    குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பதற்காக போர்வைக்குள் இருந்து கொண்டு காதலரிடம் பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் பள்ளி படிப்பையும் தொடர முடியவில்லை. காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். தற்பொழுது ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சப்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
    • டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார்.

    2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார்.

    அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த பலர் பாதிக்கப்பட்டனர்.

    உலகின் பெரிய நிறுவனமான டுவிட்டர் தனது பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது, மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களையும் இது குறித்து பரிசீலனை செய்ய வைத்தது. இந்நிகழ்வை தொடர்ந்து வேலை வாய்ப்பு எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

    இதே ஃபார்முலாவை பெரும்பான்மையான நிறுவனங்கள் கையில் எடுத்தனர். கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு மட்டும் 1.5 லட்சத்திற்கு அதிகமானோரை பணி நீக்கம் செய்தது.

    இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் மிட்டில் மேனேஜர்ஸ் எனப்படும் ஊழியர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில் வகிப்பவர்களுக்கு இடையில் பணியாற்றும் மேலாளர்கள் தான். ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கி, உடனடியாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்த எலான் மஸ்க்-இன் நடவடிக்கை தொழில்நுட்ப துறையில் பேசுபொருளாக மாறியது.

    இந்த நிலையில், எலான் மஸ்க்-இன் இந்த நடவடிக்கை காரணமாகவே தொழில்நுட்ப துறையில் இயங்கி வரும் இதர முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த காரணமாக அமைந்தது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு.
    • உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.

    உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.

    பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.

    தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

    ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.

    இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.

    எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
    • அதே சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் அஜித்குமார் நடித்து வருகிறார்.

    அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் தருவார்.

    இந்நிலையில், எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது. தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்று ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த போலியான எக்ஸ் பக்கத்தை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.
    • எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது.

    எக்ஸ் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது.

     

    இந்நிலையில் வாட்சப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை எலான் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
    • கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா?

    டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், X (ட்விட்டர்) இன் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமாகிய எலான் மஸ்க், தற்போது உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

     

    நேற்று (மே 23) பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் வெப்கேம் மூலம் பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவின் காரணமாக வருங்காலங்களில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பமே தனது மிகப்பெரிய பயம் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் ஏதெனும் ஒரு வேலையை நாம் செய்யலாம். மற்றபடி உங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் ஏஐ தொழில்நுட்பமே ரோபோக்கள் தயாரித்து வழங்கிவிடும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பற்றாக்குறை இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் திறன்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

     

    கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா? என்று கேள்வியெழுப்பிய அவர், சமூக ஊடகங்கள், மனித மூளையில் சுரக்கும் டோபோமைனை AI மூலம் அதிகப்படுத்தும் யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன என்றும் இதிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க அவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். கடந்த காலங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • கபிலன்வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.
    • கபிலன்வைரமுத்து தமிழில் எழுதிய இந்த நாவல் மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

    1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

    பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். தற்காலத்தின் மெய்நிகர் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி மற்றும் பெருந்தரவு கொள்ளை ஆகியவைகளைக் களமாகக் கொண்ட நாவலில் நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருங்காமநல்லூர் போராட்டம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    கபிலன்வைரமுத்து தமிழில் எழுதிய இந்த நாவல் மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

    இது குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில் "ஆகோள் ஒரு படைப்பு அல்ல. ஒரு பயணம். அது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு செல்வதில் மகிழ்ச்சி. மொழி,தேசம், பண்பாடு தாண்டி அனைவரும் முகம் பார்க்கும் ஒரு படைப்பாக இந்த நாவலைக் கருதுகிறேன். இந்த களத்தில் எழுதுவதற்கு இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். விரைவில் எழுத்துப்பணிகளைத் தொடங்கவிருக்கிறேன். ரூபா பதிப்பதகத்திற்கும் மொழி பெயர்த்த மீரா ரவிஷங்கர் அவர்களுக்கும், மிஸ்டிக்ஸ் ரைட் மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கும் என் நன்றி" 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்
    • இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.

    படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி.
    • விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி. ரமேஷ் குடவாலா தமிழ்நாட்டின் முன்னள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இருவருக்குமான பிரச்சனை நீண்ட நாட்களாக நடந்துக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் வெளியானது அப்போது நடந்த நேர்காணலில் இந்த பிரச்சனை குறித்து நானும் சூரியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறினார்.

    இப்பொழுது அதிர்ச்சி அளிக்கும் வகையில் விஷ்ணு விஷால், சூரி மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேரம் தான் எல்லாவற்றிற்கும் மற்றும் அனைவருக்கும் பதில், லவ் யூ அப்பா என பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவினை நடிகர் சூரி நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தலைப்பில் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×