search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pressure on the Karnataka government. கர்நாடக"

    • டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 70 அடிக்கும் கீழே சரிந்துள்ளது.
    • மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    20 நாட்கள்

    டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 70 அடிக்கும் கீழே சரிந்துள்ளது.

    இதே நிலை நீடித்தால் 20 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய 41.24 டி.எம்.சி. தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    விவசாய பணிகள்

    தண்ணீர் பெற்று தந்தால் மட்டுமே காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி மற்றும் பல லட்சம் ஏக்கரில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியும். விவசாயிகளை காப்பாற்ற உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை முதல்-அமைச்சர் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும்.

    மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர். 

    ×