search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குத்தந்தை"

    • கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் மைக்கேல் நியூமேன் (வயது 34). இவர் கன்னியாகுமரி புதுக்கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி ஆலயத்தின் இணை பங்கு தந்தை அந்தோணி பிச்சை கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

    • பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
    • புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் 423 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உரு வாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலு வைப் பாதை ஆகியவை கள் தடை செய்யப் பட்டது.

    இந்த தடைகளை நீக்கி ஆலய வழிபாடுகளை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

    இதனால் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் வழக்கம்போல் ஆலய வழி பாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது. இதை யடுத்து கடந்த மாதம் நடை பெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்குத்தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.

    ஆனால் ஆலய நிர்வாகிகள் வழிபாடு நடத்த வரும் இணை பங்குத் தந்தையர்கள் குளச்சல் ஆல யத்தில் தங்கியிருக்க வேண்டும் எனவும், வேறு பங்குத்தந்தையை நியமிக்க வேண்டும் எனவும், தடைப் பட்டுள்ள நினைவு திருப்பலியை நடத்த வே ண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனை கோட்டார் மறைமாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் குளச்சல் ஆலய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதை யடுத்து நேற்று மாலை ஆலயம் முன்பு பங்கு நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குளச்சல் ஆலய நிர்வாகம், குளச்சலில் செயல்படும் சபைகள், சங்கங்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழுவினர் உள்பட திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர்கள் அன்பியங்கள் வேண்டாம், புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து ஆலய நிர்வாகிகள் கூறுகையில், குளச்சல் பங்கு மக்களின் உணர்வு களை உணர்ந்து கோட் டார் மறை மாவட்ட நிர்வாகம் உடனே புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும். இதில் கா லதாமதம் ஏற்பட்டால் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்கு களின் கூட்டமைப்பு குழு மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றனர்.

    ×