search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கம்பத்தில்"

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி நின்றது.
    • இதில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம்-கோவை செல்லக்கூடிய பிரதான சாலையில் அதிகாலை 3 மணி அளவில் ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி மண் ஏற்றி சென்ற லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது பொறிக்கடை கார்னர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி வீட்டின் முன்பகுதியில் மோதி நின்றது. இதில் வேலூரை சேர்ந்த டிரைவர் துரையன் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அதிகாலை நேரம் என்பதால் தூக்க கலக்கத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுத்து சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனால் இன்று காலை பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மேலும் இதே பகுதியில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் தடுப்பு சுவரில் மோதி நிற்பது தொடர்கதையாகவே உள்ளது.

    எனவே இந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டும். இல்லை யென்றால் ஒளிரும் லைட்டை சாலையில் பதித்து வளைவு பகுதி என்று எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும்.

    சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கும், துறை சார்ந்த அதிகாரி களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×