search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரிய குழிகள்"

    • கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.
    • இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தையும், கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரி கள், கார்கள், இருசக்கர வாக னங்கள் என ஏராளமான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன.

    இந்நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு 66 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாகனங்கள் தொடர்ந்து தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்த பழைய பாலத்தின் வழியாக சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகிலும் ஏற்பட்டுள்ள குழிகளை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×