என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலி இமெயில்"
- கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் பெயரில் போலி மின்னஞ்சல் வந்தது.
- பணம் சென்றடைந்ததும் இரும்பு பொருட்கள் வரவில்லை.
சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி.
இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் பெயரில் போலி மின்னஞ்சல் வந்தது. இதனை வழக்கமாக கொள்முதல் செய்யும் நிறுவனம் என நம்பி இமெயிலில் தெரிவித்திருந்த கல்ப் ஸ்டீல்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அபுதாபி பெயரிலான போலி நிறுவன வங்கி கணக்குக்கு 71.93 லட்சம் ரூபாயை செலுத்தினார்.
பணம் சென்றடைந்ததும் இரும்பு பொருட்கள் வரவில்லை. இதுகுறித்து அவர் விசாரித்தபோது தான் போலி இமெயில் மூலம் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். தொடர்ந்து அவர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டது அபுதாபி நிறுவனமா? அல்லது வடமாநிலத்தை சேர்ந்த கும்பலா? என்பது குறித்து அந்த வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.