என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்கள் ஆர்ப்பாட்டம்"
- மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் மனு அளித்திருந்தனர்.
- பள்ளி மாணவிகள் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்பு முடிந்து வருவதால் பாதிப்பு ஏற்படும்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை பகுதியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்யாண ராமர் கோவில், பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்துவ தேவாலயம் என மூன்றும் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் அரசு மதுபான கடை அமைத்து விற்பனை செய்தால் இங்கு சகோதரத்துவத்துடன் வாழும் அனைத்து மத சமூக மக்கள் இடையே மதம் மற்றும் சாதிக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதனால் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் மனு அளித்திருந்தனர்.
அனைத்து சமூக மக்களின் கோரிக்கை மனுவை ஏற்றுக் கொள்ளாத மாவட்ட நிர்வாகம் தென்கரைகோட்டை ஏரி அருகே புதிதாக அரசு மதுபான கடை அமைக்க இடம் தேர்வு செய்தது.
இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் அரசு மதுபான கடை வந்தால், பெண்கள் அந்த வழியில் செல்ல பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படும். பள்ளி மாணவிகள் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்பு முடிந்து வருவதால் பாதிப்பு ஏற்படும்.
ஆனால் அதை மீறி தற்பொழுது தென்கரைக்கோட்டை பகுதியில் மதுபான கடை திறக்க திட்டமிடபட்டுள்ளதால், மதுக்கடை அமைக்க கூடாது என போராட்டம் நடத்துவது குறித்து துண்டறிக்கை அச்சிட்டு போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால் அதே வேலையில் மதுக்கடை வேண்டும் எனக் கூறி ஒரு தரப்பினர் துண்டறிக்கையைப் அச்சிட்டு போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். காவல்துறை மதுக்கடை வேண்டும் என்று அனுமதி கேட்டவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இதனை அடுத்து இன்று மதுகடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் கிராம மக்கள், தென்கரைக்கோட்டை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு இந்த மதுக்கடையை அமைக்க கூடாது என முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால் மற்றொரு தரப்பினருக்கு போலீசார் அனுமதி வழங்காததால், மதுக்கடை வேண்டும் என்று, ஆண்கள் சிலர் அந்தப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
இதனால் தென்கரைக்கோட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டனர்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் அறிவித்து அதன்மூலம் பயனாளிகள் தேர்வு செய்து 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்த பயனாளிகளை 10 வருடங்களுக்கு முன்பு உள்ள கணக்கீடு பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்படுத்தி தற்போது புதியதாக கணக்கீடு செய்து அதன்மூலம் பயனாளிகளை தேர்வு செய்திட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதியில் உள்ள பெண்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டு ஒப்பாரி வைத்து நூதனமுறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மேல்செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினர். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்