என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவிகளிடம்"
- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
- மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.
ஈரோடு:
பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கு இடையே மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் இணைய வழியில் நடைபெறும் வினாடி வினா போன்ற தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு பெருந்துறை சாலை, பழனிச்சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேல்நிலை 2-ம் ஆண்டில் 139 மாணவ, மாணவிகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டில் 87 மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டு வருகின்றது.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் இப்பள்ளியின் வளாகத்தை மேற்பார்வையிட்டதோடு பள்ளி நூலகம், ஆசிரியர் களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, தொழில் நுட்ப வகுப்பறை, மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புறத்தூய்மை, மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடு, மாணவ, மாணவிகளின் விடுதிகள் மற்றும் உணவகத்தினையும் பார்வையிட்டார்.
மேலும் முந்தைய மாணவர்கள் பங்கு பெற்ற போட்டித்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் ஆகியவை குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணாக்களின் பல்வேறு விதமான வினாக்களுக்கு பதில் அளித்ததுடன், "தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புவது" என்றும், ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றியும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மாணவர்களிடம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இலக்கினை நிர்ணயிக்க வேண்டும். பல புத்தகங்களை படிக்க வேண்டும். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, அதை தகர்த்து விட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மாணவர்களின் பல்வேறு திறமைகளைப் பாராட்டி அவற்றை மென்மேலும் வளர்த்து அடுத்த வருடம் அனைவரும் சாதனையாளர்களாக மாறி வரும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் மாணவ, மாணவி கள் வெளிப்படுத்திய தனித் திறன்களான கவிதை, பாடல், பேச்சு, சித்திரத் தையல் போன்றவற்றை கண்டு மகிழ்ந்து அவர்களை மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், உதவி திட்ட அலுலவர் ராதாகிருஷ்ணன், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், ஒருங்கிணைப்பாளர் மாதுனியாள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்