search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பத்தின் தாக்கம்"

    வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

    விழுப்புரம்:

    வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.கடந்த காலங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் மரக்காணம் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை தண்ணீர் நிரம்பி விவசாயிகளுக்கு பயிரிட தேவையான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அதேசமயம் மரக்காணத்தில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட 25 ஆயிரம் டன் உப்பை பாதுகாப்பாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

    வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • பொதுமக்கள் பரிதவிப்பு
    • காலையிலேயே அனல்காற்று வீசுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். காலை நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

    பெரியவர்கள் மதியம் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. நாகர்கோவில் நகர பகுதி களில் மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு வெயில் சுட்டெ ரித்து வருகிறது. சாலைகளில் கானல் நீராக காட்சியளிக்கிறது.

    வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வழக்கமாக குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கண்ணாமூச்சி காட்டிவிட்டது.

    வழக்கத்தை விட 65 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை யடுத்து இளநீர் மற்றும் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இளநீர் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

    சுங்கான்கடை, தக்கலை, நாகர்கோவில், கன்னியா குமரி, சுசீந்திரம் பகுதிகளில் சாலையோரங்களில் இளநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இளநீர் ரூ.40 முதல் ரூ.50 வரை விற் பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நுங்கு விற்பனையும் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது.

    ×