என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திரிபுரசுந்தரி"
- 4 கால் மண்டபத்தையடுத்து 2வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
- வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.
தாழக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது.
இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே ராஜகோபுரம்.
ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது.
இக்கோகுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது.
அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது.
இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன.
4 கால் மண்டபத்தையடுத்து 2வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.
2-வது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது.
இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்டஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை.
இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன.
ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது.
- இந்த தாழக்கோவில் மிகவும் பெரியது. 4 பெரிய கோபுரங்களை கொண்டது.
- கீழ்க்கோபுரம் ஒரு வைணவ அன்பரால் கட்டப்பட்டது என்று கூறுவர். இங்குள்ள ஆமை மண்டபம் பெரியது.
வேதகிரீசுவரர் குடைவரை கோவிலை வணங்கி கொண்டு இறங்கி ஊருக்குள் சென்றால் தாழக்கோவிலை அடையலாம்.
இந்த தாழக்கோவில் மிகவும் பெரியது. 4 பெரிய கோபுரங்களை கொண்டது.
கீழ்க்கோபுரம் ஒரு வைணவ அன்பரால் கட்டப்பட்டது என்று கூறுவர். இங்குள்ள ஆமை மண்டபம் பெரியது.
இத்திருக்கோவிலில் இறைவன், பக்தவச்சலர் என்னும் திருப்பெயரில் எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலில் அம்பிகை பெயர் திரிபுரசுந்தரி.
மலை மேல் உள்ள வேதகிரீசுவரர் கோவிலில் அம்பிகை, பெண்ணின் நல்லாள் என்னும் திருப்பெயர் பூண்டு எழுந்தருளி, பக்தர்களுக்கு திருவருள் புரிகின்றாள்.
இவ்வம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். தாழக்கோவிலினுள் நந்தி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது.
தாழக் கோவில் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மலைக்கோவில் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் ராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது.
- இத்தலத்து மலையின் மீது ஒரு திருக்கோவிலும், மலை அடிவாரத்தில் ஊரின் நடுவே ஒரு திருக்கோவிலும் அமைந்து விளங்குகின்றன.
- மலையின் மீது உள்ள கோவிலை ‘வேதகிரிக் கோவில்’ என்றும், ஊரின் நடுவே உள்ள கோவிலை ‘தாழக்கோவில்’ என்றும் கூறுகின்றனர்.
திருக்கழுக்குன்றம் மலையை சுற்றி வரும்போது விசுவாமித்திரர் தீர்த்தம் கோடி விநாயகர் தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம் ஆகியவற்றை காணலாம்.
மலைமீது உள்ள லிங்கப் பெருமானுக்கு பின்புறம் மலையைக் குடைந்து அமைத்த மும்மூர்த்திகளின் உருவங்களையும் மற்றும் பல சிற்பங்களையும் காணலாம்.
இத்தலத்து மலையின் மீது ஒரு திருக்கோவிலும், மலை அடிவாரத்தில் ஊரின் நடுவே ஒரு திருக்கோவிலும் அமைந்து விளங்குகின்றன.
மலையின் மீது உள்ள கோவிலை 'வேதகிரிக் கோவில்' என்றும், ஊரின் நடுவே உள்ள கோவிலை 'தாழக்கோவில்' என்றும் கூறுகின்றனர்.
வேதகிரீசுவரர் திருக்கோவில் மலை மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இக்கோவிலின் கருவறை பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் குடைந்து ஆக்கப்பட்டது.
போல தோன்றும். கருவறை உட்புறச்சுவர்களில் பிரம்மன், விஷ்ணு, சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறையுள் வேதகிரீசுவரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகின்றார்.
வேதகிரீசுவரர் கோவிலின் வடபக்கமாக இருக்கும் படிகளின் வழியாக இறங்கினால், குடைவரை கோவில் ஒன்றை கண்டு வழிபடலாம்.
- சமய குரவர்கள் நால்வருக்கும் தனித்தனியாக உற்சவம் நடைபெறுகிறது.
- தல நாயகரான திரிபுரசம்ஹார மூர்த்தி, திரிபுரசுந்தரி செப்பு திருமேனிகள் கோவிலில் சிறப்பு.
செப்புத்திருமேனிகள் இக்கோவிலில் அதிகம் உள்ளன. சோமாஸ்கந்தர் திருவுருவங்கள் இரண்டு உள்ளன. பழைய சோமாஸ்கந்தர் அளவில் சிறியதாக உள்ளதால் பெரிய அளவில் புதியதாக ஒன்று செய்யப்பட்டுள்ளது. அம்மன் திருஉருவம் நின்ற நிலையில் உள்ளது.
இங்கு சமய குரவர்கள் நால்வருக்கும் தனித்தனியாக உற்சவம் நடைபெறுகிறது. அதனால் அவர்களின் செப்பு திருமேனியும் உற்சவத்தில் உள்ளது. பிரதோஷ நாயகர் அஸ்திரதேவர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர், பிரதோஷ நாயகர், பெரியநாயகி அம்மன், பிச்சாண்டவர், பள்ளியறை சொக்கர் அகிய செப்பு திருமேனிகள் இங்கு உற்சவத்தில் உள்ளன.
தல நாயகரான திரிபுரசம்ஹார மூர்த்தி, திரிபுரசுந்தரி செப்பு திருமேனிகள் கோவிலில் சிறப்பாகும். கையில் வில், அம்புடன் பரமசிவன் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இங்கு மட்டுமே.
திரிபுர சம்ஹார மூர்த்தி சந்நதி
அலங்கார மண்டபத்திற்கும், மகாமண்டபத்திற்கும் இடையில் தெற்கு நோக்கியுள்ளது. திரிபுர சம்கார மூர்த்தி இத்திருத்தலத்தின் மூர்த்தி ஆவார். மற்ற சிவ தலங்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு.
அதாவது சிவன், வில் அம்புடன் நின்ற கோலத்தில் உள்ளார். இது ஈஸ்வரன் மூன்று சூரன்களை சம்காரம் செய்த கோலமாகும். மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், நாராயணனை அம்பாக கொண்டு போர் புரிந்ததாக புராணம் கூறுகிறது. இச்சந்நதி கோபுரம் இல்லாமல் உள்ளது. இதற்கு கோபுரம் அமைக்க வேதியலுக்கு மேல் கண்டம் வரை வேலைபாடு அமைக்கப்பட்டுள்ளது.
புத்தமதம்
திருவதிகை பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்திருக்கோவில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோவிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.
இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்