search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறு சீரமைப்பு"

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    • கடற்கரையில் தடுப்புசுவர் அமைத்தல், நடைபாதையில் அலங்கார தரைகற்கள் பதித்தல்

    கன்னியாகுமரி, ஆக.9-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவுவாசல் வழியாக அனுமதிக்கப் படுகிறார்கள். இந்த கோவிலின் கிழக்கு வாசல், ஆடி அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகம், நவராத்திரி விஜய தசமி, கார்த்திகை தீபத் திருவிழா ஆகிய 5 முக்கியமான விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படுகிறது.

    இந்த கோவிலின் கிழக்கு வாசல் பகுதி நீண்ட கால மாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த னர். இதைத் தொடர்ந்து கிழக்கு வாசல் பகுதி பக்தர்களின் நன்கொடையின் மூலம் ரூ.10 லட்சம் செலவில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கடற்கரையில் தடுப்புசுவர் அமைத்தல், நடைபாதையில் அலங்கார தரைகற்கள் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. இந்த மறுசீரமைப்பு பணியின் தொடக்க விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் கலந்து கொண்டு மறுசீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பா ளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலா ளருமான ஆனந்த், குமரி மாவட்ட அறங்கா வலர் குழு உறுப்பினர்கள் சுந்தரி, துளசிதரன், கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி, வியாபாரி கள் சங்க நிர்வாகி முருகா னந்தம், கோவில்களின் முன்னாள் கண்காணிப்பா ளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் குத்தகைதாரர்கள் கணே சன், ராமச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×